தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வைஷாலி, ஹரிகா அபாரம் * செஸ் உலக கோப்பை தொடரில்...

வைஷாலி, ஹரிகா அபாரம் * செஸ் உலக கோப்பை தொடரில்...

வைஷாலி, ஹரிகா அபாரம் * செஸ் உலக கோப்பை தொடரில்...


ADDED : ஜூலை 10, 2025 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதுமி: ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். மொத்த பரிசுத் தொகை ரூ. 6 கோடி. 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.

'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் இரண்டாவது சுற்று தற்போது நடக்கிறது. இந்தியாவின் ஹரிகா, சக வீராங்கனை நந்திதாவை எதிர்கொண்டார். இருவரும் மோதிய முதல் போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார் நந்திதா. இப்போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹரிகா 1.5-0.5 என வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷாலி, கனடாவின் மெய்லி மோதினர்.

இதில் இரு போட்டியிலும் வெற்றி பெற்ற வைஷாலி (2.0-0) மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய இளம் வீராங்கனை திவ்யா, 1.5-0.5 என ஜார்ஜியாவின் கெசரியாவை சாய்த்தார்.

இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஹம்பி, உஸ்பெகிஸ்தானின் அப்ருஜாவை 1.5-0.5 என வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us