/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அர்ஜுன் முதல் வெற்றி * உலக கோப்பை செஸ் தொடரில்...
/
அர்ஜுன் முதல் வெற்றி * உலக கோப்பை செஸ் தொடரில்...
ADDED : நவ 04, 2025 10:59 PM

கோவா: உலக கோப்பை செஸ் தொடரில் முதல் வெற்றி பெற்றார் இந்தியாவின் அர்ஜுன்.
கோவாவில், செஸ் உலக கோப்பை 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று துவங்கியது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுகின்றனர்.
முதல் போட்டியில் அர்ஜுன், பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 37 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பிரான்சின் மேக்சிம் வாசியர், இந்தியாவின் சூர்யசேகர் கங்குலியை வென்றார்.
உலக சாம்பியன் குகேஷ், கஜகஸ்தானின் நோகெர்பெக்கை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 84 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, வளர்ந்து வரும், 'மெஸ்ஸி' ஆப் செஸ்' என்றழைக்கப்படம் அர்ஜென்டினாவின் 12 வயது வீரர் ஓரோ பாஸ்டியனோ மோதிய போட்டி 28 நகர்த்தலில் 'டிரா' ஆனது.
பிரக்ஞானந்தா, ஆஸ்திரேலியாவின் தெமுர் இடையிலான போட்டி 60 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ரஷ்யாவின் நேபோம்னியாட்சி (ரஷ்யா)-திப்தயான் கோஷ் (இந்தியா), ஹரிகிருஷ்ணா (இந்தியா)-ஆர்செனிய் (ரஷ்யா) மோதிய, முதல் போட்டிகள் 'டிரா' ஆகின.

