தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குகேஷ் தடுமாற்றம் * ஏழாவது சுற்று 'டிரா'

குகேஷ் தடுமாற்றம் * ஏழாவது சுற்று 'டிரா'

குகேஷ் தடுமாற்றம் * ஏழாவது சுற்று 'டிரா'


ADDED : டிச 03, 2024 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கப்பூர்: குகேஷ், டிங் லிரென் மோதிய உலக செஸ் சாம்பியன்ஷிப் ஏழாவது சுற்று 'டிரா' ஆனது.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற உலகின் 'நம்பர்---5' இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்---15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர்.

மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் ஆறு சுற்று முடிவில், போட்டி இருவரும் தலா 3.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

நேற்று ஏழாவது சுற்று நடந்தது. இந்தியாவின் குகேஷ், வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.

துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட குகேஷ், 29 வது நகர்த்தல் வரை ஆதிக்கம் செலுத்தினார். எப்படியும் வெற்றி பெறுவார் என நம்பப்பட்டது. மாறாக 30 வது நகர்த்தலில் குகேஷ் செய்த தவறை பயன்படுத்திய டிங்லிரென் மீண்டு வந்தார்.

வெற்றியை நழுவவிட்டார் குகேஷ். 5 மணி நேரம், 22 நிமிடம் நீடித்த இப்போட்டி, 72வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஏழு சுற்று முடிவில் குகேஷ் 3.5, டிங் லிரென் 3.5 புள்ளியுடன் சமமாக உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us