/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குகேஷ் எட்டாவது 'டிரா' * செஸ் உலக சாம்பியன்ஷிப்பில்...
/
குகேஷ் எட்டாவது 'டிரா' * செஸ் உலக சாம்பியன்ஷிப்பில்...
குகேஷ் எட்டாவது 'டிரா' * செஸ் உலக சாம்பியன்ஷிப்பில்...
குகேஷ் எட்டாவது 'டிரா' * செஸ் உலக சாம்பியன்ஷிப்பில்...
ADDED : டிச 07, 2024 10:41 PM

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ், டிங் லிரென் மோதிய 10வது சுற்று 'டிரா' ஆனது.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற உலகின் 'நம்பர்---5' இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்---15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர்.
மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் 9 சுற்று முடிவில், இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
நேற்று பத்தாவது சுற்று நடந்தது. இந்தியாவின் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்து, 'டிரா' செய்யும் நோக்கத்தில் லிரென் விளையாடினார். வேறு வழியில்லாத நிலையில் 36 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. பத்து சுற்று முடிவில் 1 வெற்றி, 8 'டிரா', 1 தோல்வியுடன் குகேஷ் 5.0, டிங் லிரென் 5.0 புள்ளியுடன் சமமாக உள்ளனர். இன்று 11வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளார்.