/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'உலக சாம்பியன்' பிரனவ் * 'ஜூனியர்' செஸ் தொடரில்...
/
'உலக சாம்பியன்' பிரனவ் * 'ஜூனியர்' செஸ் தொடரில்...
'உலக சாம்பியன்' பிரனவ் * 'ஜூனியர்' செஸ் தொடரில்...
'உலக சாம்பியன்' பிரனவ் * 'ஜூனியர்' செஸ் தொடரில்...
ADDED : மார் 07, 2025 10:50 PM

பெட்ரோவாச்: உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார் இந்தியாவின் பிரனவ்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) சார்பில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர், மான்டினிகிரோவில் நடந்தது. ஓபன் பிரிவில் மொத்தம் 157 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 18 வயது பிரனவ் வெங்கடேஷ், பிரனீத், அஷ்வத் உள்ளிட்டோர் களமிறங்கினார்.
11வது, கடைசி சுற்றில் பிரனவ், குரோஷியாவின் மாடிக் லாவ்ரென்சிக்கை சந்தித்தார்.
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரனவ். போட்டியின் 18 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இதையடுத்து 11 சுற்றில் 7 வெற்றி, 4 'டிரா' செய்த பிரனவ், 9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். மாடிக் லாவ்ரென்சிக் (8.5), டென் மார்க்கின் எல்ஹாம் (8.5) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் சவிதா ஸ்ரீ (7.0), அதிகபட்சம் 14வது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தார்.
நான்காவது இந்தியர்
உலக ஜூனியர் செஸ் சாம்பியன் தொடரில் இந்தியாவின் ஆனந்த் (1987), ஹரிகிருஷ்ணா (2004), அபிஜீத் குப்தா (2008) கோப்பை வென்றனர். தற்போது 17 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் பிரனவ் இத்தொடரில் சாம்பியன் ஆனார்.