/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: ஹம்பி, அர்ஜுன் வெற்றி * உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில்...
/
செஸ்: ஹம்பி, அர்ஜுன் வெற்றி * உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில்...
செஸ்: ஹம்பி, அர்ஜுன் வெற்றி * உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில்...
செஸ்: ஹம்பி, அர்ஜுன் வெற்றி * உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில்...
ADDED : டிச 27, 2025 11:18 PM

தோகா: உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில் 7வது சுற்று முடிவில் 6 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார் இந்தியாவின் ஹம்பி.
கத்தார் தலைநகர் தோகாவில் உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த 8வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், ஸ்பெயினின் ஆன்டனை வீழ்த்தினார். பிரக்ஞானந்தா, வியட்நாமின் துவான் மின்னை 69 வது நகர்த்தலில் வென்றார். இந்திய வீரர் நிஹால் சரின், ரஷ்யாவின் இவான் ஜெமில்யன்ஸ்கியை சாய்த்தார்.
அர்ஜுன், 8வது சுற்றில் சக வீரர் நாராயணனை சாய்த்தார். 8 சுற்று முடிவில் அர்ஜுன் 6.5 புள்ளியுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார். குகேஷ் (8.5) 8, நிஹால் சரின் (6.0) 16 வது இடங்களில் உள்ளனர்.
ஹம்பி முதலிடம்
பெண்கள் பிரிவில் 141 பேர் பங்கேற்றுள்ளனர். 7வது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயினின் சாராவை வென்றார். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் டிங்ஜீ மோதிய 7வது சுற்று 'டிரா' ஆனது. ஏழு சுற்று முடிவில் இந்தியாவின் ஹம்பி, 6.0 புள்ளியுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். ஹரிகா (5.5) 5, திவ்யா (5.0) 10வது இடங்களில் உள்ளனர்.

