உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 29, 2026 11:38 PM

அ நிறம் | அளவு
மான்டெசில்வனோ: இத்தாலியில் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. மொத்தம் 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் 104 பேர் பங்கேற்றனர்.
மொத்தம் 11 சுற்று போட்டிகள் நடந்தன. இந்தியா சார்பில் பிரதிதீ போர்டோலோய், சரண்யா தேவி உள்ளிட்டோர் களமிறங்கினர். 11 சுற்றில் 7 ல் வெற்றி பெற்று, 4ல் 'டிரா' செய்தார் பிரதிதீ. ஒன்றில் கூட தோற்காத இவர், 9.0 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ரஷ்யாவின் வலேரியா (10.0) தங்கம், உக்ரைனின் சோபியா (8.5) வெண்கலம் கைப்பற்றினர். மற்ற இந்திய வீராங்கனைகள் சரண்யா தேவி 17 (7.0), அனுஷ்கா 32வது (6.0) இடம் பிடித்தனர்.
ஆண்கள் 16 வயது பிரிவில் கடைசி கட்ட சுற்றில் ஏமாற்றிய கவுதம் கிருஷ்ணா (7.5) 10 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
