தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சீன ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக்

சீன ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக்

சீன ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக்


ADDED : அக் 07, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: சீனாவின் பீஜிங்கில், பெண்களுக்கான சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக் 25, அமெரிக்காவின் இவா ஜோவிச் 18, மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 3-6, 3-6 என, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சிடம் தோல்வியடைந்தார். காலிறுதியில் ஸ்வியாடெக், மெர்டென்ஸ் மோதுகின்றனர்.

மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பெர்ரேட்டினி வெற்றி

ஷாங்காய்: சீனாவில், ஏ.டி.பி., ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலியின் மேட்டியோ பெர்ரேட்டினி, அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிச் மோதினர். இதில் பெர்ரேட்டினி 6-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

நட்பு கால்பந்து: அமெரிக்கா அபாரம்

செயின்ட் பால்: அமெரிக்காவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. ஜஸ்டின் எல்லிஸ் (29வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுக்க, அமெரிக்க அணி 1-0 என வெற்றி பெற்றது. இது, சர்வதேச நட்பு கால்பந்தில் அமெரிக்காவுக்கு வரிசையாக கிடைத்த 4வது வெற்றியானது. ஏற்கனவே பெரு (4-1), சிலி (4-2), மெக்சிகோ (3-0) அணிகளை வீழ்த்தி இருந்தது.

எக்ஸ்டிராஸ்

* பின்லாந்தில் நடக்கும் ஆர்டிக் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் தருண் 21-16, 21-14 என, டென்மார்க்கின் மாக்னஸ் ஜோஹனேசனை வீழ்த்தினார். இந்திய வீரர் பிரனாய் 10-21, 9-21 என, டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனிடம் தோல்வியடைந்தார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வரும் அக். 10ல் துவங்குகிறது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 163 போட்டிகளை, 'யூ டியூப்' சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என, ஐ.எஸ்.எல்., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஐதராபாத்தில், வரும் அக். 8-18ல் வில்வித்தை பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) 2வது சீசன் நடக்கவுள்ளது. இதில், ஒலிம்பிக் சாம்பியன்களான துருக்கியின் மெடே கசோஸ், மெக்சிகோவின் அலெசான்ட்ரா வாலென்சியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* ஆமதாபாத்தில், இந்திய பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் கூட்டமைப்பு சார்பில் காமன்வெல்த் 'கியூ ஸ்போர்ட்ஸ்' சாம்பியன்ஷிப் 2வது சீசன் நேற்று துவங்கிறது. இதில் 42 நாடுகளை சேர்ந்த 144 பேர் (72 வீரர், 72 வீராங்கனை) பங்கேற்கின்றனர். மொத்தம் 10 பதக்கம் வழங்கப்படுகிறது.

* மியான்மரில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து (17 வயது) 2வது போட்டியில், இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் மியான்மர் அணியை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.

* டில்லியில் நடக்கும் பெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2வது சுற்றில் பிரனவ் கார்த்திக் 1-6, 7-6, 6-2 என, உதித் கம்போஜை வீழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us