ADDED : மே 15, 2026 07:14 PM

புக்காரெஸ்ட்: 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரின் முதல் சுற்றை இந்தியாவின் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன் 6 தொடர்களாக நடக்கிறது. இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின், சின்டாரோவ், ஜெர்மனியின் வின்சன்ட் கீமர், அமெரிக்காவின் சோ வெஸ்லே உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா பிரூஸ்ஜா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 60வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார்.
ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் (கருப்பு), அமெரிக்காவின் சோ வெஸ்லே (வெள்ளை) மோதிய மற்றொரு முதல் சுற்றும் 'டிரா' ஆனது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, அமெரிக்காவின் பேபியானா காருனா, தங்களது முதல் சுற்றை 'டிரா' செய்தனர்.
