தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'


ADDED : மே 17, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புக்காரெஸ்ட்: பிரக்ஞானந்தா, வின்சென்ட் கீமர் மோதிய 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரின் 3வது சுற்று 'டிரா' ஆனது.

'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 6 தொடர்களாக நடக்கிறது. இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் சின்டாரோவ் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா (வெள்ளை), ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் (கருப்பு) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 64வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்றொரு 3வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி (வெள்ளை), 72வது நகர்த்தலில் பிரான்சின் அலிரேசா பிரூஸ்ஜாவை (கருப்பு) வீழ்த்தினார். அமெரிக்காவின் சோ வெஸ்லே (வெள்ளை), பேபியானா காருனா (கருப்பு) மோதிய 3வது சுற்று போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மூன்று சுற்றுகளின் முடிவில், அனிஷ் கிரி, கீமர், பிரக்ஞானந்தா, ஜோர்டான் வான் பாரெஸ்ட் (நெதர்லாந்து), மேக்சிம் வாசியர் (பிரான்ஸ்) தலா 2.0 புள்ளிகளுடன் 'டாப்-5' இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us