தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெள்ளி வென்றார் ஞானேஷ்வரி * காமன்வெல்த் விளையாட்டில்...

வெள்ளி வென்றார் ஞானேஷ்வரி * காமன்வெல்த் விளையாட்டில்...

வெள்ளி வென்றார் ஞானேஷ்வரி * காமன்வெல்த் விளையாட்டில்...


ADDED : ஜூலை 27, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் ஞானேஷ்வரி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 53 கிலோ பிரிவு பளுதுாக்குதல் நடந்தது. இந்தியா சார்பில் ஞானேஷ்வரி பங்கேற்றார். முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 88 கிலோ துாக்கினார். அடுத்த நடந்த 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 111 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 199 கிலோ துாக்கிய ஞானேஷ்வரி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

நைஜீரியாவின் ஒனொமே திதி, 206 கிலோ எடை (93+113) துாக்கி, காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் தட்டிச் சென்றார். கனடாவின் ரெபெக்காவுக்கு (178) வெண்கலம் கிடைத்தது.

சத்தீஸ்கர் நாயகி

சத்தீஸ்கரை சேர்ந்தவர் ஞானேஷ்வரி 23. கடந்த 2003ல் போதியா கிராமத்தில் பிறந்தார். 2025ல் பஹ்ரைனில் நடந்த உலக பளுதுாக்குதலில் 5வது இடம் பெற்றார். 'சப்-இன்பெக்டர்' ஆக பணி புரிகிறார்.

பிந்தியாராணி'வெண்கலம்'

பெண்களுக்கான 58 கிலோ பிரிவு பளு துாக்குதல் நடந்தது. இந்தியா சார்பில் பிந்தியாராணி தேவி பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் அதிகபட்சம் 87 கிலோ துாக்கினார். அடுத்து 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 112 கிலோ துாக்கினார். மொத்தம் 199 கிலோ துாக்கிய பிந்தியாராணி, வெண்கலப் பதக்கம் வென்றார். நைஜீரியாவின் ரபியடு (229), கனடாவின் சோபி (215) என இருவரும் தங்கம், வெள்ளி கைப்பற்றினர்.

பைனலில் 'இருவர்'

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிப் போட்டி நடந்தது. குறைந்தது 8.00 மீ., தாண்டினால் பைனலுக்கு முன்னேறலாம். இந்தியா சார்பில் முரளி ஸ்ரீசங்கர் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 8.01 மீ., தாண்டியதால், பைனலுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன், 'பி' பிரிவில் பங்கேற்றார். இரண்டாவது வாய்ப்பில் 7.77 மீ., தாண்டிய போதும், 12 பேர் கொண்ட பைனலுக்கு முன்னேறினார்.

குரிந்தர்விர் சிங் ஏமாற்றம்

ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் குரிந்தர்விர் சிங் பங்கேற்றார். மொத்தம் 11 தகுதிச்சுற்றில் சிறந்த 17 வீரர்கள் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில், குரிந்தர்விர் சிங், தகுதிச்சுற்று 4ல் களமிறங்கினார். இதில் 10.39 வினாடி நேரத்தில் வந்து, இரண்டாவது இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக இவர், 28 வது இடம் பிடித்து வெளியேறினார்.

தேஜாஸ் அபாரம்

ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. இந்தியாவின் தேஜாஸ் ஷிர்சே, 13.76 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். இங்கிலாந்தின் பென்னெட் (13.20), ஜமைக்காவின் கெம்பெல் (13.33) முதல் இரு இடம் பிடித்தனர்.

சாஜன் பிரகாஷ் நம்பிக்கை

ஆண்களுக்கான நீச்சலில் 200 மீ., பட்டர்பிளை பிரிவில் இந்தியாவில் சாஜன் பிரகாஷ் பங்கேற்றார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஸ்காட்லாந்தின் டங்கன் ஸ்காட் இடம் பெற்றிருந்த, தகுதிச்சுற்று 2ல் களமிறங்கினார் சாஜன். முதல் 100 மீ., வரை சாஜன் முன்னிலையில் இருந்தார். கடைசி நேரத்தில் ஸ்காட் (1:58.29 வினாடி) முந்த, சாஜன் (1:58.59) இரண்டாவது இடம் பெற்றார். ஒட்டு மொத்தமாக வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் சச்சின்

ஆண்களுக்கான குத்துச்சண்டை, 60 கிலோ பிரிவில் 'ரவுண்டு-16' சுற்று நடந்தது. இந்திய வீரர் சச்சின் சிவாச் 26, இங்கிலாந்தின் வில்லியம் ஹெவிட்சை சந்தித்தார்.

சமீபத்திய உலக சாம்பியன்ஷிப்பில் சிவாச்சை வென்ற ஹெவிட், வெண்கலம் கைப்பற்றி இருந்தார். இம்முறை துவக்கத்தில் இருந்து மூன்று சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய சச்சின், 4-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

* ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு, 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஜடுமானி சிங், 5-0 என பாகிஸ்தான் வீரர் சுமமா ரஹ்மானை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

* ஆண்களுக்கான 80 கிலோ பிரிவில் இந்தியாவின் அன்குஷ், 5-0 என ஆன்டிகுவாவின் ஜலானை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

சமந்தா 'நம்பர்-7'

பெண்களுக்கான ஆர்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்ஸ், வால்ட் பிரிவில் பைனல் நடந்தது. 8 பேர் பங்கேற்றனர். இந்திய வீராங்கனை புரோடிஸ்தா சமந்தா, மொத்தம் 12.883 புள்ளிகள் மட்டும் பெற, 7வது இடம் கிடைத்தது. கனடாவின் மோனிகா (14.000), இங்கிலாந்தின் அபிகெய்ல் (13.799), வேல்சின் ரோபெர் (13.433) முதல் மூன்று பதக்கம் வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us