/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தீபக் புனியா, சுஜீத் ஏமாற்றம்: மழையால் வந்த சிக்கல்
/
தீபக் புனியா, சுஜீத் ஏமாற்றம்: மழையால் வந்த சிக்கல்
தீபக் புனியா, சுஜீத் ஏமாற்றம்: மழையால் வந்த சிக்கல்
தீபக் புனியா, சுஜீத் ஏமாற்றம்: மழையால் வந்த சிக்கல்
ADDED : ஏப் 19, 2024 09:54 PM

பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் ஆசிய ஒலிம்பிக் மல்யுத்த தகுதி போட்டி நேற்று துவங்கியது. இந்தியா சார்பில் தீபக் புனியா (86 கிலோ), சுஜீத் (65 கிலோ), வினேஷ் போகத் உள்ளிட்டோர் பங்கேற்க தேர்வாகினர். இதில் தீபக், சுஜீத் இருவரும் ஏப். 2-15ல் ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டனர். ஏப். 16ல் துபாய் வழியாக கிர்கிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் துபாயில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் 259.5 மி.மி., மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வேறு வழியில்லாத நிலையில் நேற்று காலை தீபக், சுஜீத் கிர்கிஸ்தான் சென்றனர். எடை சோதனையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட போதும், சரியான நேரத்திற்கு வரவில்லை என்ற காரணத்திற்காக போட்டியில் களமிறங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஒலிம்பிக் தகுதி பெறும் வாய்ப்பு தவறியது.
அடுத்து மே மாதம் நடக்கவுள்ள உலக மல்யுத்த ஒலிம்பிக் தகுதி போட்டியில் பங்கேற்று சாதித்தால், இவர்கள் பாரிஸ் ஒலிம்பிக் செல்லலாம்.

