/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தீப்தி ஜீவன்ஜி 'தங்கம்': உலக 'பாரா' தடகளத்தில்
/
தீப்தி ஜீவன்ஜி 'தங்கம்': உலக 'பாரா' தடகளத்தில்
ADDED : மே 20, 2024 10:50 PM

கொபே: உலக 'பாரா' தடகளத்தின் 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்றார்.
ஜப்பானில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 400 மீ., 'டி20' பிரிவு ஓட்டத்தின் பைனலில் இலக்கை 55.07 வினாடியில் கடந்த இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு பாரிசில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்காவின் பிரேனா கிளார்க் பந்தய துாரத்தை 55.12 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார். தவிர, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் தீப்தி.
ஆண்களுக்கான வட்டு எறிதல் 'எப்56' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 41.80 மீ., எறிந்த இந்தியாவின் யோகேஷ் கதுனியா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான குண்டு எறிதல் 'எப்34' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 7.56 மீ., எறிந்த இந்தியாவின் பாக்யஸ்ரீ மஹாவ்ராவ் ஜாதவ் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.

