/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் தனுஷ் ஸ்ரீகாந்த்: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
/
தங்கம் வென்றார் தனுஷ் ஸ்ரீகாந்த்: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் தனுஷ் ஸ்ரீகாந்த்: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் தனுஷ் ஸ்ரீகாந்த்: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
ADDED : நவ 16, 2025 11:11 PM

டோக்கியோ: காது கேளாதோர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தனுஷ் (10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம் வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் ('டெப்லிம்பிக்ஸ்') 25வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் (630.6 புள்ளி), முகமது முர்டசா வானியா (626.3) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய தனுஷ், 252.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, 'டெப்லிம்பிக்ஸ்' வரலாற்றில் தனுஷ் கைப்பற்றிய 3வது தங்கம். இதற்கு முன் 2021ல் பிரேசிலில் நடந்த போட்டியில், தனிநபர், கலப்பு அணிகள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தவிர இவர், 'டெப்லிம்பிக்ஸ்' (630.6), 'டெப் பைனல்' (252.2) உலக சாதனைகளை முறியடித்தார். இன்று நடக்கவுள்ள கலப்பு அணிகளுக்கான பிரிவில் சகவீராங்கனை மஹித் சாந்துவுடன் இணைந்து அசத்தினால், 'டெப்லிம்பிக்ஸ்' அரங்கில் தனது 4வது தங்கத்தை தனுஷ் கைப்பற்றலாம்.
இரண்டாவது இடம் பிடித்த முர்டசா (250.1) வெள்ளி வென்றார்.
மஹித் 'வெள்ளி': பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மஹித் சாந்து (623.4), கோமல் மிலிந்து வாக்மேர் (622.0) முறையே 2, 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.
அடுத்து நடந்த பைனலில் மஹித் சாந்து (250.5) 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். கோமல் வாக்மேர் (228.3) வெண்கலத்தை கைப்பற்றினார். உக்ரைனின் லிட்கோவா (252.4) தங்கத்தை தட்டிச் சென்றார்.

