தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டைமண்ட் லீக் தடகளம் * களமிறங்கும் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளம் * களமிறங்கும் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளம் * களமிறங்கும் நீரஜ் சோப்ரா


ADDED : ஆக 17, 2024 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: லாசேன் டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார்.

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. டோக்கியோ (தங்கம்), பாரிஸ் (வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார். தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை செய்ய ஜெர்மனி சென்றதாக கூறப்பட்டது. ஆனால், சுவிட்சர்லாந்தில் ஆக. 22ல் (லாசேன்) நடக்கவுள்ள டையமண்ட் லீக் போட்டியில் சாதிக்க நீரஜ் சோப்ரா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏனெனில் பல்வேறு டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்று, புள்ளிப்பட்டியலில் 'டாப்-6' இடம் பெற்றால் தான், அடுத்து பிரஸ்சல்சில் (பெல்ஜியம், செப். 13-14) நடக்கவுள்ள டைமண்ட் லீக் பைனலில் பங்கேற்கலாம்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில்,''பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகும் காயம் பெரிதாகவில்லை. இதற்கு பிசியோதெரபிஸ்ட் இஷான் தான் காரணம். இந்த சீசன் முழுவதும் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். பின், டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வேன்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us