/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் 'வெள்ளி' ரகசியம் * டையமண்ட் லீக் ஈட்டி எறிதலில்...
/
நீரஜ் 'வெள்ளி' ரகசியம் * டையமண்ட் லீக் ஈட்டி எறிதலில்...
நீரஜ் 'வெள்ளி' ரகசியம் * டையமண்ட் லீக் ஈட்டி எறிதலில்...
நீரஜ் 'வெள்ளி' ரகசியம் * டையமண்ட் லீக் ஈட்டி எறிதலில்...
ADDED : ஆக 23, 2024 11:37 PM

லாசேன்: ''லாசேன் 'டையமண்ட் லீக்' தடகளத்தில் ஜூலியஸ் கொடுத்த 'அட்வைஸ்' வெள்ளிப்பதக்கம் வெல்ல கைகொடுத்தது,'' என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் லாசேனில் 'டையமண்ட் லீக்' தடகளப் போட்டி நடந்தது. ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 26, பங்கேற்றார். ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) இவர், இம்முறை முதல் நான்கு 82.10, 83.21, 83.13, 82.34 மீ., மட்டும் எறிய, நான்காவது இடத்தில் இருந்தார்.
அடுத்த வாய்ப்பில் 'டாப்-3' இடம் பெற்றால் மட்டுமே, கடைசி வாய்ப்பு கிடைக்கும் என்ற இக்கட்டான நிலையில், 85.58 மீ., எறிந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 89.49 மீ., எறிய, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இங்கு 2022, 2023 போல, நீரஜ் சோப்ராவின் 'ஹாட்ரிக்' தங்கம் வெல்லும் வாய்ப்பு நழுவியது.
கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (90.61 மீ.,) தங்கம், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.08 மீ.,) வெண்கலம் வென்றனர்.
நீரஜ் சோப்ரா கூறுகையில்,''எனது உடற்தகுதி சிறப்பாக இல்லை. எனினும் போட்டி மனப்பான்மை உறுதியாக இருந்தது. கடைசி வாய்ப்பில் அதிகம் முயற்சிக்கவில்லை. சக வீரர் ஜூலியஸ் எகோ கூறியது போல,' ரிலாக்சாக இருக்க முயற்சித்தேன். முடிந்தவரை துாரமாக எறிந்தேன். இன்னும் ஒருசில போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். 'டையமண்ட் லீக்' பைனலில் (செப். 14, பெல்ஜியம்) பங்கேற்பேனா என உறுதியாகத் தெரியவில்லை,'' என்றார்.