தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பைனலில் நீரஜ் சோப்ரா * டைமண்ட் லீக் தொடரில்...

பைனலில் நீரஜ் சோப்ரா * டைமண்ட் லீக் தொடரில்...

பைனலில் நீரஜ் சோப்ரா * டைமண்ட் லீக் தொடரில்...


ADDED : செப் 06, 2024 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டைமண்ட் லீக் பைனலில் பங்கேற்க தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.

டைமண்ட் லீக் தடகளத்தின் 15வது சீசன் தற்போது நடக்கிறது. 2024ல் உலகின் 14 இடங்களில் போட்டி நடந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-6' நட்சத்திரங்கள், பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடக்கவுள்ள, டைமண்ட் லீக் பைனலில் (செப். 13-14) பங்கேற்க தகுதி பெற்றனர்.

இதற்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். 2024 சீசனில் தோகா, லாசேன் என இரு டைமண்ட் லீக் தடகளத்தில் மட்டும் இவர் பங்கேற்றிருந்தார். இந்த இரு போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, மொத்தம் 14 புள்ளி பெற்று, நான்காவது இடம் பிடித்தார்.

இவருடன் 'டாப்-3' இடம் பிடித்த ஈட்டி எறிதல் வீரர்கள் கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (29 புள்ளி), ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (21), செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் (16), 5, 6வது இடம் பெற்ற மால்டோவாவின் ஆன்ரியன் மார்டேர் (13), ஜப்பானின் ரோடெரிக் (12) இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

டோக்கியோவில் தங்கம் (2021), பாரிசில் வெள்ளி (2024) என இரு ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சாதிக்க முயற்சிக்கலாம். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், காயம் காரணமாக டைமண்ட் லீக் தொடரின் கடைசி 3 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் தகுதிபெற இயலவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us