தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * டைமண்ட் லீக் பைனல் துவக்கம்

சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * டைமண்ட் லீக் பைனல் துவக்கம்

சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * டைமண்ட் லீக் பைனல் துவக்கம்


ADDED : ஆக 26, 2025 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூரிச்: உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசனில் உலகின் 14 இடங்களில் போட்டிகள் நடந்தன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-6' நட்சத்திரங்கள் பங்கேற்கும், டைமண்ட் லீக் பைனல், இன்று சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் துவங்குகிறது.

இரு நாள் நடக்கும் இப்போட்டியில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்று தந்த நீரஜ் சோப்ரா, 2025ல் இரு தொடரில் மட்டும் பங்கேற்றார். கத்தாரில் 90.23 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம், பாரிசில் 88.16 மீ., எறிந்து, முதலிடம் பிடித்தார்.

மூன்றாவது முறை

இதையடுத்து 15 புள்ளியுடன், டைமண்ட் லீக் பைனலில் மூன்றாவது முறையாக பங்கேற்க வாய்ப்பு பெற்றார் நீரஜ் சோப்ரா. கடந்த 2023 (83.80 மீ.,), 2024 (87.86 மீ.,) என இரு முறையும் இரண்டாவது இடம் பெற்றார்.

தவிர, டப்பு ஆண்டில் பங்கேற்ற 6 சர்வதேச தொடரில் நீரஜ் சோப்ரா, 4ல் முதலிடம், 2ல் இரண்டாவது இடம் பெற்றுள்ளார். இதனால் இம்முறை சாம்பியன் ஆகலாம்.

இவருக்கு கெஷ்ஹார்ன் (டிரினிடாட் அண்டு டுபாகோ), ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா) சவால் கொடுக்க காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us