சிந்துவுக்கு கடின சவால்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்
சிந்துவுக்கு கடின சவால்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்
UPDATED : அக் 12, 2026 09:13 PM
ADDED : அக் 12, 2026 08:56 PM

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென், கடின பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
டென்மார்க்கில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்துவுக்கு கடின சவால் காத்திருக்கிறது. முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையுமான தென் கொரியாவின் ஆன் சே–யங்கை சந்திக்கிறார் சிந்து. தென் கொரிய வீராங்கனைக்கு எதிராக கடைசியாக விளையாடிய 10 போட்டியிலும் சிந்து தோல்வியடைந்தார். கடந்த ஜூலை மாதம் ஜப்பான் ஓபனில் கோப்பை வென்ற சிந்து, சமீபத்தில் பின்லாந்தில் நடந்த ஆர்க்டிக் ஓபனில் காலிறுதியோடு திரும்பினார். டென்மார்க் ஓபனில் சிந்து எழுச்சி கண்டால், நடப்பு சீசனில் 2வது பட்டம் வெல்லலாம்.
பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் தான்வி சர்மா, அஷ்மிதா, தேவிகா சிகாக், உன்னதி ஹூடா பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் ‘நம்பர்–3’ வீரரான சீனதைபேயின் சோ டியென் செனை சந்திக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த் களமிறங்குகின்றனர்.
இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்–சிராக் ஷெட்டி, காயத்ரி கோபிசந்த்–திரீசா ஜோடிகள் பங்கேற்கின்றன.
