/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் திக் ஷா: 'டெப்லிம்பிக்ஸ்' கோல்ப் போட்டியில்
/
தங்கம் வென்றார் திக் ஷா: 'டெப்லிம்பிக்ஸ்' கோல்ப் போட்டியில்
தங்கம் வென்றார் திக் ஷா: 'டெப்லிம்பிக்ஸ்' கோல்ப் போட்டியில்
தங்கம் வென்றார் திக் ஷா: 'டெப்லிம்பிக்ஸ்' கோல்ப் போட்டியில்
ADDED : நவ 20, 2025 10:41 PM

டோக்கியோ: 'டெப்லிம்பிக்ஸ்' கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை திக் ஷா தங்கம் வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனை என, 73 பேர் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான கோல்ப் போட்டியில் இந்தியா சார்பில் திக் ஷா தாகர் 24, பங்கேற்றார். மூன்று சுற்றுகளின் முடிவில் 205 புள்ளிகளுடன் (68, 65, 72) முதலிடம் பிடித்த திக் ஷா, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, 'டெப்லிம்பிக்ஸ்' வரலாற்றில் திக் ஷா கைப்பற்றிய 2வது தங்கம், 3வது பதக்கம் ஆனது. கடந்த 2017ல் வெள்ளி வென்ற இவர், 2021ல் தங்கம் வென்றிருந்தார். கடந்த 2021ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற திக் ஷா, 50வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
ஆண்களுக்கான கோல்ப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஹர்ஷ் சிங் (238 புள்ளி), விபு தியாகி (240) முறையே 12, 14வது இடம் பிடித்தனர்.
மஹித் 'வெள்ளி': பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மஹித் சாந்து, உலக சாதனையுடன் (619.7 புள்ளி) முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை நடாஷா ஜோஷி (611.6 புள்ளி) 7வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய மஹித், 246.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இது, இம்முறை மஹித் கைப்பற்றிய 3வது பதக்கம். கலப்பு அணிகள் பிரிவில் (10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம் வென்ற இவர், தனிநபர் பிரிவில் (10 மீ., 'ஏர் ரைபிள்') வெள்ளி வென்றிருந்தார்.
நடாஷா ஜோஷி (119.6) 8வது இடம் பிடித்து ஏமாற்றினார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் 12 பதக்கம் கிடைத்துள்ளன.

