UPDATED : அக் 05, 2026 10:35 AM
ADDED : அக் 05, 2026 12:02 AM
ஆசிய விளையாட்டில் இம்முறை இந்தியாவுக்கு தடகளத்தில் அதிகபட்சமாக 24 பதக்கம் (1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம்) கிடைத்தது. ஒவ்வொரு விளையாட்டிலும் இந்தியா வென்ற பதக்க விபரம்.
போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
தடகளம் 1 9 14 24
துப்பாக்கி சுடுதல் 3 8 4 15
வில்வித்தை 5 2 2 9
குத்துச்சண்டை 3 0 3 6
மல்யுத்தம் 2 2 2 6
ஸ்குவாஷ் 0 2 3 5
பாய்மரப்படகு 0 1 2 3
கிரிக்கெட் 2 0 0 2
ஹாக்கி 2 0 0 2
கபடி 2 0 0 2
கோல்ப் 1 1 0 2
பளுதுாக்குதல் 0 1 0 1
உஷு 0 1 0 1
பாட்மின்டன் 0 0 1 1
டேபிள் டென்னிஸ் 0 0 1 1
குராஷ் 0 0 1 1
தற்காப்பு கலை 0 0 1 1
செபக்தக்ரா 0 0 1 1
படகு வலித்தல் 0 0 1 1
சாப்ட் டென்னிஸ் 0 0 1 1
மொத்தம் 21 27 37 85)
நான்காவது இடம்
ஆசிய விளையாட்டில் இந்தியா இம்முறை 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என, 85 பதக்கங்களுடன், பட்டியலில் 4வது இடம் பிடித்தது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 2வது அதிகபட்ச தங்கம், பதக்கம். கடந்த முறை (2022) 28 தங்கம் உட்பட 106 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்திருந்தது.
இந்தியா அதிக பதக்கம் வென்ற ‘டாப்–3’ சீசன்.
சீசன் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் ‘ரேங்க்’
2022 28 38 40 106 4
2026 21 27 37 85 4
2018 16 23 31 70 8
ஐந்து பேர்... மூன்று பதக்கம்
இம்முறை அதிக பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில், கும்கும் (வில்வித்தை), நீரு தண்டா (துப்பாக்கி சுடுதல்), வித்யா ராம்ராஜ் (தடகளம்), குல்வீர் சிங் (தடகளம்), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (துப்பாக்கி சுடுதல்) முதலிடம் பிடித்தனர்.
இதில் கும்கும், நீரு தலா 2 தங்கம், ஒரு வெள்ளி என, 3 பதக்கம் வென்றனர். தமிழகத்தின் வித்யா, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கம் வென்றார். குல்வீர், ருத்ராங்க் ஷ் தலா 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கம் பெற்றனர்.
‘பாரா’ விளையாட்டு எப்போது
ஜப்பானின், அய்ச்சி – நகோயா நகரில் வரும் அக். 18–24ல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 18 வகையான விளையாட்டில் பங்கேற்க உள்ளனர்.
