sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டுப்ளான்டிஸ் உலக சாதனை * 'போல் வால்ட்' போட்டியில்...

டுப்ளான்டிஸ் உலக சாதனை * 'போல் வால்ட்' போட்டியில்...

டுப்ளான்டிஸ் உலக சாதனை * 'போல் வால்ட்' போட்டியில்...


ADDED : ஜூன் 16, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2025 11:04 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாக்ஹோம்: சுவீடனை சேர்ந்த 'போல் வால்ட்' வீரர் டுப்ளான்டிஸ் 25. டோக்கியோ (2021), பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) தங்கம் வென்றார். இரு முறை உலக சாம்பியன்ஷிப்பில் (2022, 2023) தங்கம் கைப்பற்றினார். நேற்று சுவீடனில் நடந்த டைமண்ட் லீக் தடகளத்தில் பங்கேற்றார்.

'போல் வால்ட்' போட்டியில், 6.00 மீ., தாவி, தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் கர்டிஸ் மார்ஸ்சால் (5.90 மீ., ), நெதர்லாந்தின் மென்னோ விலுான் (5.80 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

பின் சாதனை முயற்சியாக 6.28 மீ., உயரம் தாவி அசத்தினார். இதையடுத்து 'போல் வால்ட்' போட்டியில் 12வது முறையாக உலக சாதனை படைத்தார். இதற்கு முன் பிரான்சில் கடந்த மார்ச் மாதம் நடந்த உலக தடகள உள்ளரங்கு போட்டியில் 6.27 மீ., உயரம் தாவி இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us