sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

எலைட் குத்துச்சண்டை: லவ்லினா 'தங்கம்'

/

எலைட் குத்துச்சண்டை: லவ்லினா 'தங்கம்'

எலைட் குத்துச்சண்டை: லவ்லினா 'தங்கம்'

எலைட் குத்துச்சண்டை: லவ்லினா 'தங்கம்'


ADDED : பிப் 08, 2026 09:01 PM

Google News

ADDED : பிப் 08, 2026 09:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லா நுசியா: எலைட் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் லவ்லினா, சச்சின் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.

ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடந்தது. பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் லவ்லினா, இங்கிலாந்தின் மேரி-கேட் ஸ்மித் மோதினர். இதில் லவ்லினா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் அசத்திய பிரியா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (70), நைனா (80), மஞ்சு ராணி (48), நீது கங்காஸ் (51), பூனம் (54) தங்கம் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் (54 கிலோ) வெள்ளி வென்றார்.

ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சச்சின், கனடாவின் கியோமா அலி அல் அஹ்மதியே மோதினர். இதில் சச்சின் 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு பைனலில் (75 கிலோ) இந்தியாவின் ஆகாஷ் 3-2 என, கஜகஸ்தானின் அமன் கோன்ஸ்பெகோவை தோற்கடித்தார்.

மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் தீபக் (70 கிலோ), அங்குஷ் (80) வெள்ளி வென்றனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என, 19 பதக்கம் கிடைத்தது.






      Dinamalar
      Follow us