/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
எலைட் குத்துச்சண்டை: பைனலில் லவ்லினா
/
எலைட் குத்துச்சண்டை: பைனலில் லவ்லினா
ADDED : பிப் 07, 2026 10:45 PM

லா நுசியா: எலைட் குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் லவ்லினா, சச்சின் உள்ளிட்டோர் முன்னேறினர்.
ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, வேல்சின் ரோஸி எக்லெஸ் மோதினர். இதில் லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என, பிரான்சின் அயா ஹம்தியை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் பூனம் 4-1 என இங்கிலாந்தின் இவி-ஜேன் ஸ்மித்தை தோற்கடித்தார். இதனையடுத்து 60 கிலோ பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி உறுதியானது.
பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் மஞ்சு ராணி (48 கிலோ), நீது கங்காஸ் (51), பிரியா (60), அருந்ததி சவுத்ரி (70), நைனா (80) வெற்றி பெற்றனர்.ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சச்சின் 5-0 என, இங்கிலாந்தின் ஜாக் டிரைடனை வீழ்த்தினார். மற்ற அரையிறுதியில் இந்தியாவின் தீபக் (70 கிலோ), ஆகாஷ் (75), அங்குஷ் (80) வெற்றி பெற்றனர்.
அரையிறுதியில் ஏமாற்றிய பிரஞ்சல் யாதவ் (65 கிலோ), காஜல் (65), சனமச்சா சானு (75), மன்கிரத் கவுர் (80+), ஜடுமணி சிங் (50), முகமது ஹுசைன் (60), ஹிதேஷ் குலியா (70) வெண்கலம் வென்றனர்.
இத்தொடரில் 12 இந்திய நட்சத்திரங்கள் (8 வீராங்கனைகள், 4 வீரர்கள்) பைனலுக்குள் நுழைந்தனர்.

