உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 09, 2026 11:19 PM

அ நிறம் | அளவு
பீல்பெர்ஜென்: நெதர்லாந்து குதிரையேற்ற போட்டியில் இந்தியாவின் நிஹாரிகா சிங்கானியா தங்கம் வென்றார்.
நெதர்லாந்தில் பீல்பெர்ஜென், 'ஸ்டால் ஹென்ரிக்ஸ் ப்ரீ' சர்வதேச குதிரையேற்ற போட்டி நடந்தது. மொத்தம் 72 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் நிஹாரிகா சிங்கானியா, 'மிஸ்டர்' தண்டர் என்ற குதிரையுடன் களமிறங்கினார். இரு பிரிவுகளாக போட்டி நடந்தன.
முதல் பிரிவில் நிஹாரிகா சிங்கானியா, 37.31 புள்ளி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட இவர், 37.79 புள்ளி எடுத்து, முதலிடம் பெற, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். பெல்ஜியத்தில் எலிசா ஸ்ட்ருப்பே (37.93, 38.13) இரண்டாவது இடம் பிடித்தார். கனடா வீரர் கிறிஸ் சோரன்சென் (36.89, 38.15) மூன்றாவது இடம் பெற்றார்.
