
மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில் 'பெராரி' அணியின் ஸ்பெயின் வீரர் கார்லஸ் சைன்ஸ் (ஒரு மணி நேரம், 20 நிமிடம், 26.843 வினாடி) சாம்பியன் பட்டம் வென்றார்.
* புவனேஸ்வரில் நடந்த இந்திய பெண்கள் கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா அணி 6-0 என 'கிக்ஸ்டார்ட்' அணியை வீழ்த்தியது. 12 போட்டியில், 10 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என 31 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஒடிசா, முதன்முறையாக கோப்பை வென்றது.
* லண்டனில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. பிரேசில் சார்பில் என்ட்ரிக் (80வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
* புளோரிடாவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-1 என இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை வீழ்த்தினார். மூன்றாவது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 4-6, 6-1, 1-6 என உக்ரைனின் கலினினாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
* தாகாவில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி (98/4, 23.5 ஓவர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை (97/10, 44.1 ஓவர்) வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலை பெற்றது.
* நெல்சனில் நடந்த 3வது 'டி-20' போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி (155/3) 3 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை (152/8) வீழ்த்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

