UPDATED : அக் 11, 2026 09:36 PM
ADDED : அக் 11, 2026 08:36 PM

* புனேயில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் இன்டர் காஷி, கேரளா அணிகள் மோதின. விபின், கிரீன் தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க கேரளா அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
* கொல்கட்டாவில் நடந்த பெண்களுக்கான 2வது நட்பு கால்பந்து போட்டியில் இந்தியா, ரஷ்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0–8 என, மீண்டும் தோல்வியடைந்தது.
* போர்ச்சுகலின் லாகோஸ் நகரில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் மாயா ரேவதி 6–4, 6–2 என, ஸ்பெயினின் செர்வினோ ரூயிசை வீழ்த்தினார். இது, மாயா ரேவதி 17, கைப்பற்றிய முதல் ஐ.டி.எப்., ஒற்றையர் பட்டம். ஏற்கனவே இவர், இத்தொடரின் இரட்டையரிலும் கோப்பை வென்றிருந்தார்.
* எகிப்து ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 2–3 (7–11, 11–8, 14–12, 6–11, 6–11) என, எகிப்தின் பைரூஸ் அபோல்கெய்ரிடம் தோல்வியடைந்தார். ஆண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 2–3 (11–8, 11–9, 11–13, 6–11, 7–11) என, பிரான்சின் விக்டர் குரூயினிடம் வீழ்ந்தார்.
