தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கிரிக்கெட் லீக் தொடருக்கான ஐதராபாத், டில்லி அணிகள் ‘டிரேடு’ முறையில் வீரர்களை மாற்றிக் கொண்டது. தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், மீண்டும் ஐதராபாத் அணிக்கு திரும்பினார். சுழற்பந்துவீச்சாளர் ஜீஷான் அன்சாரி, டில்லி அணியில் இணைந்தார்.

* உ.பி.,யின் ஜான்சியில் தேசிய சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் நடக்கிறது. தமிழகம், பெங்கால் அணிகள் மோதிய ‘ஏ’ பிரிவு லீக் போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது. தமிழகம் சார்பில் சண்முகம் ஒரு கோல் அடித்தார். ‘டி’ பிரிவு போட்டியில் ஹரியானா அணி 3–1 என, டில்லியை வீழ்த்தியது. ‘பி’ பிரிவு போட்டியில் மஹாராஷ்டிரா அணி 2–1 என, புதுச்சேரியை வென்றது.

* கபடி சாம்பியன்ஸ் லீக் 2வது சீசனுக்கான வீரர்கள் ஏலம், வரும் அக். 17ல் நடக்கவுள்ளது. இதில் 10 அணிகள் சார்பில், ரூ. 5 கோடி வரை ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

* இந்தியாவில், வரும் ஜன. 23ல் நடக்கவுள்ள தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீரஜ் கோயத், அமெரிக்காவின் அந்தோணி பெட்டிஸ் மோதவுள்ளனர். ஆறு சுற்றுகள் கொண்ட ‘சூப்பர் வெல்டர்வெயிட்’ பிரிவு (69.9 கிலோ) போட்டியை நடத்த சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என, மூன்று நகரங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us