ADDED : அக் 29, 2026 03:49 AM

சீனாவின் நிங்போ நகரில் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, முதல் முறையாக 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார். இத்தொடரில் இந்தியா சார்பில் ஞானேஷ்வரி யாதவ் (53 கிலோ), நிருபமா தேவி (61), உஷா (61), லவ்பிரீத் சிங் (110 கிலோ) பங்கேற்கின்றனர்.
இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் 18, காயம் காரணமாக கனடா ஓபன் தொடரின் காலிறுதியில் இருந்து விலகினார். இவருடன் மோத இருந்த எகிப்தின் பைரூஸ் அபோல்கெய்ர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் பிக் பாஷ் லீக் தொடருக்கான பிரிஸ்பேன் ஹீட் அணியில் இருந்து, காயத்தால் (இடுப்பு பகுதி) ஆஸ்திரேலிய ‘ஆல்–ரவுண்டர்’ ஜெஸ் ஜோனாசென் விலகினார். இவருக்கு பதிலாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் யஸ்திகா பாட்யா சேர்க்கப்பட்டார்.
அஜர்பெய்ஜானில் உலக கோப்பை (15 வயது) கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 65–96வது இடத்துக்கான ‘ரவுண்டு–32’ போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 1–2 என, ஹோண்டுராஸ் அணியிடம் வீழ்ந்தது. இனி, 81–96வது இடத்துக்கான ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்திய அணி, டிரினிடாட் அண்ட் டுபாகோ அணியை சந்திக்கிறது.
