தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


ADDED : நவ 24, 2026 09:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 09:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மத்திய பிரதேசத்தின் போபாலில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆர்யன் லட்சுமணன், கரண் சிங், ஹிதேஷ் சவுகான் வெற்றி பெற்றனர்.

* கவுகாத்தியில் நடந்த சீனியர் பெண்கள் மண்டல அணிகளுக்கான ‘டி–20’ போட்டியில் மேற்கு மண்டல அணி (150/5), 5 விக்கெட்டில் கிழக்கு மண்டல (149/5) வென்றது. மற்றொரு போட்டியில் வடகிழக்கு மண்டல அணி (97/6), தெற்கு மண்டல அணியிடம் (155/5), 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

* உலக பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 8 இடம் முன்னேறிய இந்தியாவின் ரக் ஷித்தா (‘நம்பர்–39’), முதன் முறையாக ‘டாப்–40’ பட்டியலில் இடம் பிடித்தார்.

* கஜகஸ்தானில் பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் கஜகஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 27–33 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

* இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, கடந்த 2022, டிச. 22 முதல் உள்ளார். மீண்டும் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு விண்ணப்பிக்காத நிலையில் வரும் டிச. 5ம் தேதியுடன் 4 ஆண்டு பதவி முடிவுக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us