ADDED : ஏப் 29, 2024 10:06 PM

புஜைரா: ஒலிம்பிக் வாள் சண்டை தகுதிச் சுற்றில் பவானி தேவி ஏமாற்றினார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பாரிஸ் ஒலிம்பிக் வாள் சண்டை போட்டிக்கான ஆசிய-ஓசியானியா மண்டல தகுதிச் சுற்று நடந்தது. பெண்களுக்கான 'சப்ரே' பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பவானி தேவி 15-8 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஜூலியட் ஜீ மின் ஹெங்கை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் ஏமாற்றிய தமிழகத்தின் பவானி 12-15 என ஹாங்காங்கின் சு விங் கியூவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பவானி தேவி, ஒலிம்பிக் வாள் சண்டை போட்டியில் விளையாடிய முதல் இந்தியரானார்.
ஆண்களுக்கான 'சப்ரே' பிரிவு பைனலில் இந்தியாவின் கரண் சிங் 2-15 என சீனாவின் சென்பெங் ஷென்னிடம் தோல்வியடைந்தார். பெண்களுக்கான 'எப்பி' பிரிவு பைனலில் இந்தியாவின் தனிஷ்கா காட்ரி 13-15 என சிங்கப்பூரின் கிரியா டிகானாவிடம் வீழ்ந்தார். மற்ற இந்திய நட்சத்திரங்களான தேவ் (ஆண்கள் 'பாயில்'), உதய்வீர் சிங் (ஆண்கள் 'எப்பி'), ஜாய்ஸ் அஷிதா ஸ்டாலின்ராஜ் (பெண்கள் 'பாயில்') காலிறுதிக்கு தகுதி பெறத்தவறினர்.
இதன்மூலம் இத்தொடரில் பங்கேற்ற 6 இந்திய நட்சத்திரங்களும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறத்தவறினர்.
