/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சிந்துவுக்கு கொடி கவுரவம்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்
/
சிந்துவுக்கு கொடி கவுரவம்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்
சிந்துவுக்கு கொடி கவுரவம்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்
சிந்துவுக்கு கொடி கவுரவம்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்
ADDED : ஜூலை 08, 2024 11:20 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மூவர்ணக் கொடியை சிந்து ஏந்தி வர உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் ஜூலை 26 முதல் ஆக. 11 வரை 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதன் துவக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி வரும் கவுரவம் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுக்கு வழங்கப்பட்டது. இவருடன் பாட்மின்டன் வீராங்கனை சிந்துவும் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி வர உள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் (2016) வெள்ளி வென்ற சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெண்கலம் வென்றிருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு தலைவராக ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டிருந்தார். சொந்த காரணங்களுக்காக இப்பதவியில் இருந்து மேரி கோம் விலகினார். இதனையடுத்து முன்னாள் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், இந்திய குழுவுக்கு தலைவராக அறிவிக்கப்பட்டார். இவர், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார்.