/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'பார்முலா-1' கார்பந்தயம்: நோரிஸ் 'உலக சாம்பியன்'
/
'பார்முலா-1' கார்பந்தயம்: நோரிஸ் 'உலக சாம்பியன்'
ADDED : டிச 07, 2025 11:11 PM

அபுதாபி: 'பார்முலா-1' கார்பந்தயத்தின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார்.
நடப்பு ஆண்டுக்கான 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயம் 24 சுற்றுகளாக நடந்தது. அபுதாபியில் கடைசி சுற்று நடந்தது. இதில் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து), பியாஸ்ட்ரி (ஆஸ்திரேலியா), நோரிஸ் (இங்கிலாந்து) ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது.
பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 26 நிமிடம், 07.469 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த 'ரெட் புல் ரேஸிங்' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் ஆனார். இது, இந்த ஆண்டு இவர் வென்ற 8வது பட்டம். அடுத்த இரு இடங்களை 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி (ஆஸ்திரேலியா), லாண்டோ நோரிஸ் (இங்கிலாந்து) தட்டிச் சென்றனர்.
நோரிஸ் முதலிடம்: 24 சுற்றுகளின் முடிவில், சிறந்த டிரைவருக்கான புள்ளிப்பட்டியலில் லாண்டோ நோரிஸ் (423 புள்ளி) முதலிடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 'பார்முலா-1' அரங்கில் முதன்முறையாக உலக சாம்பியன் ஆனார். தவிர, 17 ஆண்டுகளுக்கு பின், 'மெக்லாரன்-மெர்சிடஸ்' அணி வீரர் உலக சாம்பியன் பட்டம் பெற்றார். கடைசியாக 2008ல் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
'நடப்பு உலக சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய வெர்ஸ்டாப்பன் (421 புள்ளி) 2வது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை பியாஸ்ட்ரி (410 புள்ளி) தட்டிச் சென்றார்.

