/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சென்னையில் மீண்டும் 'பார்முலா-4' கார்பந்தயம்
/
சென்னையில் மீண்டும் 'பார்முலா-4' கார்பந்தயம்
ADDED : செப் 13, 2024 11:10 PM

சென்னை: இந்தியன் ரேசிங் லீக் 'பார்முலா-4' கார்பந்தயம் சென்னை, இருங்காட்டுகோட்டையில் இன்று துவங்குகிறது.
இந்தியன் ரேசிங் லீக் (ஐ.ஆர்.எல்.,) கார்பந்தயத்தின் 3வது சீசன், ஐந்து சுற்றுகளாக நடக்கிறது. இதில் 'பார்முலா-4' இந்தியன் சாம்பியன்ஷிப், நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் (எல்.ஜி.பி.4), இந்தியன் நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இடம் பெற்றள்ளன. சென்னை, பெங்கால், கோவா, டில்லி உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் ஒரு வீராங்கனை உட்பட 4 'டிரைவர்' இடம் பெற்றிருப்பர்.
சமீபத்தில் முதலிரண்டு சுற்றுகள் (ஆக. 24-25, ஆக. 31-செப். 1) நடந்தன. இதன் முடிவில், சிறந்த அணிகளுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெங்கால் டைகர்ஸ் அணி 107 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது சுற்றுக்கான போட்டிகள் சென்னை, இருங்காட்டுகோட்டையில் உள்ள 'மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டில்' இன்றும், நாளையும் நடக்கின்றன.

