/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குளோபல் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'
/
குளோபல் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'
ADDED : அக் 12, 2024 10:13 PM

லண்டன்: லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடக்கிறது. மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும். இதன் 10வது, கடைசி சுற்று லீக் போட்டியில் ஆல்பைன் பைப்பர்ஸ், 'நடப்பு சாம்பியன்' திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் அணிகள் மோதின.
முதல் போட்டியில் மாக்னஸ் கார்ல்சன் (ஆல்பைன்), அலிரேசா பிரோஸ்ஜா (திரிவேணி) மோதினர். இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார். பிரக்ஞாந்தா (ஆல்பைன்), யி வெய் (திரிவேணி) மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது.
மற்ற போட்டிகளில் திரிவேணி அணியின் வாலென்டினா குனினா, ஜாவோகிர் சின்டரோவ் வெற்றி பெற்றனர். முடிவில் திரிவேணி அணி 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பத்து சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை கைப்பற்றிய அலாஸ்கன் நைட்ஸ் (24 புள்ளி), திரிவேணி (18) அணிகள் பைனலுக்கு முன்னேறின.

