தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பைனலுக்கு முன்னேறியது கோவா: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

பைனலுக்கு முன்னேறியது கோவா: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

பைனலுக்கு முன்னேறியது கோவா: அல்டிமேட் டேபிள் டென்னிசில்


ADDED : செப் 05, 2024 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் பைனலுக்கு கோவா அணி முன்னேறியது. அரையிறுதியில் 8-4 என பெங்களூருவை வீழ்த்தியது.

சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் பெங்களூரு, கோவா அணிகள் மோதின. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெங்களூருவின் அல்வரோ ரோபிள்ஸ் 1-2 (8-11, 7-11, 11-7) என கோவாவின் மிஹாய் போபோசிகாவிடம் வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெங்களூருவின் மணிகா பத்ரா 1-2 (11-4, 7-11, 4-11) என கோவா அணியின் யாங்ஜி லியுவிடம் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையரில் எழுச்சி கண்ட பெங்களூருவின் மணிகா, அல்வாரோ ஜோடி 2-1 (11-10, 11-7, 9-11) என கோவாவின் ஹர்மீத் தேசாய், யாங்ஜி ஜோடியை வீழ்த்தியது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய் 3-0 (11-5, 11-9, 11-8) என பெங்களூருவின் ஜீத் சந்திராவை வென்றார்.

முடிவில் கோவா அணி 8-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் (செப். 6) ஆமதாபாத்-டில்லி அணிகள் விளையாடுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us