தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குகேஷ்-டிங் லிரென் 'டிரா' * கிராண்ட் செஸ் தொடரில்...

குகேஷ்-டிங் லிரென் 'டிரா' * கிராண்ட் செஸ் தொடரில்...

குகேஷ்-டிங் லிரென் 'டிரா' * கிராண்ட் செஸ் தொடரில்...


ADDED : ஆக 20, 2024 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிசவுரி: கிராண்ட் செஸ் தொடரில் குகேஷ், டிங் லிரென் மோதிய போட்டி 'டிரா' ஆனது.

கிராண்ட் செஸ் தொடரின் 9வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பை கொண்டு செல்வார்.

ஒவ்வொரு தொடரிலும் ரேபிட், பிளிட்ஸ் என இரு முறையில் போட்டிகள் நடக்கும். இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் உட்பட உலகின் 'டாப்-9' வீரருடன், சிறப்பு அனுமதி (வைல்டு கார்டு) பெற்ற, உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் பங்கேற்கிறார். இதன் முதல் சுற்றில் நேற்று, குகேஷ், டிங் லிரென் மோதினர்.

வரும் உலக சாம்பியன்ஷிப் (நவ., 23-டிச., 15) போட்டியில் ஒருவருக்கு ஒருவர் மோத காத்திருக்கும் சூழலில், இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார்.

துவக்கத்தில் இருவரும் சமபலத்தில் விளையாடினர். 18 வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, லிரென் முந்தினார். இருப்பினும், 20 வது நகர்த்தலில் லிரென் தவறு காரணமாக, சமநிலைக்கு சென்றது. பின் 28 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.

மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, நாடிர் பெக் (உஸ்பெகிஸ்தான்) மோதினர். இப்போட்டி 36 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முதல் சுற்று முடிவில் பிரான்சின் அலிரேசா (1.0) முதலிடத்தில் உள்ளார். தலா 0.5 புள்ளியுடன் டிங் லிரென் 6வது, பிரக்ஞானந்தா, குகேஷ் 8, 9 வது இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us