தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: பிரக்ஞானந்தா ஏமாற்றம்

செஸ்: பிரக்ஞானந்தா ஏமாற்றம்

செஸ்: பிரக்ஞானந்தா ஏமாற்றம்


ADDED : ஆக 24, 2024 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிசவுரி: அமெரிக்காவில் கிராண்ட் செஸ் தொடரின் 2 சீசன் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் உட்பட உலகின் 'டாப்-9' வீரருடன், சிறப்பு அனுமதி (வைல்டு கார்டு) பெற்ற, உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் பங்கேற்கிறார்.

இதன் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லே விளையாடினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா. போட்டியில் பெரும்பாலான நேரத்தில் ஆதிக்கம் செலுத்தினார். சரியான பினிஷிங் செய்ய முடியாமல் தடுமாற, 107 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.

இந்தியாவின் குகேஷ், அஜர்பெய்ஜானின் நாடிர்பெக் மோதிய மற்றொரு போட்டி 46 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஐந்து சுற்று முடிவில் அமெரிக்காவின் பிரான்சின் அலிரேசா (3.5), வெஸ்லே (3.0) முதல் இரு இடத்தில் உள்ளனர். தலா 2.5 புள்ளியுடன் குகேஷ் 4வது, பிரக்ஞானந்தா 7 வது இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us