
மிசவுரி: கிராண்ட் செஸ் தொடரின் 8வது சுற்று போட்டியை குகேஷ், பிரக்யானந்தா 'டிரா' செய்தனர்.
அமெரிக்காவில் கிராண்ட் செஸ் தொடரின் 2 சீசன் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் உட்பட உலகின் 'டாப்-9' வீரருடன், சிறப்பு அனுமதி (வைல்டு கார்டு) பெற்ற, உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் பங்கேற்கிறார்.
இதன் எட்டாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 23 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ காருணாவுடன் விளையாடினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 28 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். எட்டு சுற்று முடிவில் அமெரிக்காவின் பிரான்சின் அலிரேசா (5.5), காருணா (4.5) முதல் இரு இடத்தில் உள்ளனர். தலா 4.0 புள்ளியுடன் குகேஷ் 5வது, பிரக்ஞானந்தா 7 வது இடத்தில் உள்ளனர்.