/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக செஸ்: இந்தியா ஆதிக்கம் * காஸ்பரோவ் பாராட்டு
/
உலக செஸ்: இந்தியா ஆதிக்கம் * காஸ்பரோவ் பாராட்டு
ADDED : ஏப் 23, 2024 10:50 PM

புதுடில்லி: ''டொரன்டோவில் ஏற்பட்ட இந்திய 'பூகம்பம்', செஸ் உலகை உலுக்கியுள்ளது,'' என கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ் என 3 பேர் களமிறங்கினார். பெண்கள் பிரிவில் ஹம்பி, வைஷாலி பங்கேற்றனர்.
14 சுற்று முடிவில் 17 வயது குகேஷ், 9.0 புள்ளி பெற்று கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் ஆன இளம் வீரர் ஆனார். உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில் பங்கேற்கும் இளம் வீரர் என்ற பெருமையும் பெற்றார். இதுகுறித்து ஆறுமுறை உலக சாம்பியனான ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் கூறியது:
இந்தியாவின் 17 வயது வீரர் குகேஷ், 'கேண்டிடேட்ஸ்' தொடரில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். அடுத்து உலக சாம்பியன் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரெனை எதிர் கொள்ளவுள்ளார்.
செஸ் விளையாட்டில் கடந்த காலத்தில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தியது. இதுபோல தற்போது டொரன்டோவில் இந்திய 'பூகம்பம்' ஏற்பட்டுள்ளது. செஸ் உலகையே புரட்டி போட்டுள்ளது. ஐந்துமுறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், இந்தியாவில் செஸ் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கினார். ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் 'டீன் ஏஜ்' பருவத்தில் செஸ் விளையாடத் துவங்குகின்றனர். பல்வேறு புதிய கிராண்ட்மாஸ்டர்கள் வருகின்றனர். உண்மையில் ஆனந்தின் 'குழந்தைகள்' தற்போது வளர்ந்து விட்டனர். இதன் பலனை தற்போது அறுவடை செய்கிறது இந்தியா.
இவ்வாறு கேரி காஸ்பரோவ் கூறினார்.

