தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குகேஷ் இரண்டாவது வெற்றி * கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்

குகேஷ் இரண்டாவது வெற்றி * கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்

குகேஷ் இரண்டாவது வெற்றி * கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்


ADDED : ஏப் 10, 2024 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டொரன்டோ: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றார் குகேஷ்.

கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அஜர்பெய்ஜானின் நிஜாத்தை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் குகேஷ். சுமார் 6 மணி நேரம் நடந்த போட்டியில், 87 வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவர் பெற்ற இரண்டாவது வெற்றி இது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி மோதிய போட்டி 'டிரா' ஆனது. இந்திய வீரர் விதித் சந்தோஷ், அமெரிக்காவின் காருணாவுக்கு எதிராக 'டிரா' செய்தார்.

ஐந்து சுற்று முடிவில் குகேஷ் (3.5), நேபோம்னியாட்சி (3.5) காருணா (3.0) முதல் மூன்று இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (2.5) நான்காவது இடத்தில் தொடர்கிறார். விதித் சந்தோஷ் (2.0) 6வது இடத்தில் உள்ளார்.

இரண்டு 'டிரா'

பெண்களுக்கான தொடரில் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, வைஷாலி தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். வைஷாலி (2.5), ஹம்பி (2.0) 4, 6வது இடத்தில் நீடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us