/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குல்வீர் சிங், சீமா முதலிடம்: 'வேர்ல்டு 25கே' ஓட்டத்தில்
/
குல்வீர் சிங், சீமா முதலிடம்: 'வேர்ல்டு 25கே' ஓட்டத்தில்
குல்வீர் சிங், சீமா முதலிடம்: 'வேர்ல்டு 25கே' ஓட்டத்தில்
குல்வீர் சிங், சீமா முதலிடம்: 'வேர்ல்டு 25கே' ஓட்டத்தில்
ADDED : டிச 21, 2025 10:51 PM

கோல்கட்டா: 'வேர்ல்டு 25கே' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங், சீமா முதலிடம் பிடித்தனர்.
கோல்கட்டாவில், 'வேர்ல்டு 25கே' ஓட்டப்பந்தயத்தின் (25 கி.மீ.,) 10வது சீசன் நடந்தது. இந்திய வீரர்கள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 12 நிமிடம், 06 வினாடியில் கடந்த குல்வீர் சிங், தனது சொந்த சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு நடந்த இப்போட்டியில் இவர், இலக்கை ஒரு மணி நேரம், 14 நிமிடம், 10 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்திருந்தார்.
அடுத்த இரு இடங்களை ஹர்மன்ஜோத் சிங் (1:15:11), சவான் பார்வல் (1:15:25) கைப்பற்றினர்.
சீமா சாதனை
இந்திய வீராங்கனைகள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 26 நிமிடம், 04 வினாடியில் கடந்த சீமா, புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இதற்கு முன் 2017ல் நடந்த இப்போட்டியில் இந்திய வீராங்கனை சூர்யா, இலக்கை ஒரு மணி நேரம், 26 நிமிடம், 53 வினாடியில் கடந்திருந்தார்.
'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய சஞ்ஜீவானி ஜாதவ் (1:30:34) 2வது இடம் பிடித்தார். நிர்மாபென் தாகூர் (1:32:02) 3வது இடத்தை கைப்பற்றினார்.
சர்வதேச வீரர்கள் பிரிவில் உகாண்டாவின் ஜோஷுவா செப்டெகி (ஒரு மணி நேரம், 11 நிமிடம், 49 வினாடி) சாம்பியன் ஆனார். சர்வதேச வீராங்கனைகள் பிரிவில் எத்தியோபியாவின் டெகிடு அசிமெராவ் (1:19:36) முதலிடத்தை கைப்பற்றினார்.

