தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குரிந்தர்வீர் சிங் தேர்வு: இந்திய தடகள அணிக்கு

குரிந்தர்வீர் சிங் தேர்வு: இந்திய தடகள அணிக்கு

குரிந்தர்வீர் சிங் தேர்வு: இந்திய தடகள அணிக்கு


ADDED : ஜூன் 03, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 10:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சீனாவின் ஷாங்யு நகரில், வரும் ஜூன் 20-21ல் ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் 2வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான 29 பேர் கொண்ட இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை, இந்திய தடகள கூட்டமைப்பு வெளியிட்டது. ஆண்கள், கலப்பு அணிகளுக்கான 4X100 மீ., போட்டிக்கு இந்தியாவின் குரிந்தர்வீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த பெடரேஷன் கோப்பை சீனியர் தடகளத்தின் 100 மீ., ஓட்டத்தில் இலக்கை 10.09 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.

தவிர இந்த அணியில் பூவம்மா, சுபா, தமன்னா, அபினயா, அவினாஷ் குமார், அனிமேஷ் குஜுர், சந்தோஷ், மோகித் குமார், செந்தில் குமார் தமிழரசு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து-நியூசி., மோதல்

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இன்று, முதல் டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன், ஓவல் (ஜூன் 17-21), நாட்டிங்காமில் (ஜூன் 25-29) நடக்கவுள்ளன. டெஸ்ட் அரங்கில் இவ்விரு அணிகள் 115 போட்டியில் மோதின. இதில் இங்கிலாந்து 54, நியூசிலாந்து 14ல் வென்றன. 47 டெஸ்ட் 'டிரா' ஆனது. கடைசியாக, ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரை 1-4 என இழந்த இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us