/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் தீபா கர்மாகர்
/
ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் தீபா கர்மாகர்
ADDED : ஏப் 18, 2024 10:51 PM

தோகா: உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் 'வால்ட்' பிரிவு பைனலுக்கு இந்தியாவின் தீபா கர்மாகர் முன்னேறினார்.
கத்தார் தலைநகர் தோகாவில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் நடக்கிறது. இது, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றாகும். பெண்களுக்கான 'வால்ட்' பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் 30, பிரனதி நாயக் 29, உள்ளிட்ட 12 பேர் பங்கேற்றனர். இதன் தகுதிச் சுற்றில் 12.783 புள்ளி பெற்ற தீபா கர்மாகர் 6வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். கடந்த மாதம் அஜர்பெய்ஜானில் நடந்த உலக கோப்பை 'வால்ட்' பிரிவு பைனலில் தீபா கர்மாகர் 4வது இடம் பிடித்திருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனதி நாயக் 12.416 புள்ளிகளுடன் 11வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
தகுதிச் சுற்றில் முதல் மூன்று இடங்களை பனாமாவின் நவாஸ் கர்லா (13.916 புள்ளி), பல்கேரியாவின் ஜார்ஜீவா வாலன்டினா (13.316), வடகொரியாவின் ஆன் சாங் ஓகே (13.166) கைப்பற்றினர்.

