உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 15, 2026 11:25 PM

அ நிறம் | அளவு
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் கிமயா கார்லே, பரினா ராகுல் பங்கேற்றனர். 'பால்' பிரிவில் சிறப்பாக செயல்பட்ட கிமயா, 22.50 புள்ளிகள் பெற்றார். பங்கேற்ற 71 பேரில் கிமயாவுக்கு 48 வது இடம் கிடைத்தது.
தவிர, ஹூப் பிரிவில் 21.90, ரிப்பன் பிரிவில் 21.40, கிளப்ஸ் பிரிவில் 19.00 என நான்கு பிரிவுகளில் மொத்தம் 82.80 புள்ளிகள் பெற்று, 62வது இடம் பிடித்தார். 2025-28 உலக கோப்பை சீசனில் சிறப்பான இடம் பெற்ற இந்தியர் ஆனார் கிமயா.
மற்றொரு வீராங்கனை பரினா, மொத்தம் 80.70 புள்ளி பெற்று, 67 வது இடம் பிடித்தார்.
