தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரனதி 'வெள்ளி'

ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரனதி 'வெள்ளி'

ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரனதி 'வெள்ளி'


ADDED : மே 23, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாஷ்கென்ட்: உலக சாலஞ்ச் கோப்பை ஜிம்னாஸ்டிக்சில் இந்தியாவின் பிரனதி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் உலக சாலஞ்ச் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் நடந்தது. இதன் வால்ட் பிரிவில், இந்தியா சார்பில் பிரனதி நாயக், புரோடிஸ்தா சமந்தா பங்கேற்றனர்.

போட்டி 1ல் பிரனதி, 12.950 புள்ளிகள் எடுத்தார். தொடர்ந்து போட்டி 2லும் சிறப்பாக செயல்பட்ட இவர் 12.700 புள்ளிகள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக பிரனதி, 12.825 புள்ளிகள் பெற, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார்.

மற்றொரு வீராங்கனை சமந்தா, 12.650 (12.750 + 11.550) புள்ளிகள் பெற, ஆறாவது இடம் பிடித்தார்.

வியட்நாமின் தி நிகுயென் (13.175) தங்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் யுசுபோவா (12.750) வெண்கலம் கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us