ADDED : ஏப் 16, 2026 10:27 PM

ஹம்பர்க்: ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா, வீர் சோட்ரானி வெற்றி பெற்றனர்.
ஜெர்மனியில், ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, ஜெர்மனியின் சாஸ்கியா பெய்ன்ஹார்டு மோதினர். இதில் ஜோஷ்னா 3-0 (11-4, 11-5, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி கண்ணா, அயர்லாந்தின் ஹன்னா கிரெய்க் மோதினர். இதில் ஏமாற்றிய தான்வி 0-3 (5-11, 7-11, 11-13) என தோல்வியடைந்தார்.
ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஜப்பானின் டிசுகு மோதினர். இதில் ஏமாற்றிய வேலவன் 0-3 (4-11, 9-11, 12-14) என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வீர் சோட்ரானி 3-0 (11-8, 11-9, 11-8) என, ஸ்பெயினின் இவான் பெரெசை வீழ்த்தினார்.
மற்ற இந்திய வீரர்களான அபே சிங், ரமித் டான்டன் ஆகியோருக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டதால், நேரடியாக 2வது சுற்றில் விளையாட உள்ளனர்.
