ADDED : ஏப் 17, 2026 10:52 PM

ஹம்பர்க்: ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா, அபே சிங், ரமித் டான்டன் தோல்வியடைந்தனர்.
ஜெர்மனியில், ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, நியூசிலாந்தின் ஜோயல் கிங் மோதினர். இதில் ஏமாற்றிய ஜோஷ்னா 1-3 (9-11, 7-11, 11-9, 4-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, ஜெர்மனியின் ரபேல் காந்த்ரா மோதினர். இதில் வீர் சோட்ரானி 3-0 (11-8, 11-7, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் அபே சிங் 1-3 (9-11, 11-7, 4-11, 2-11) என, இங்கிலாந்தின் சாம் டாட்டிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் ரமித் டான்டன் 1-3 (10-12, 11-4, 5-11, 9-11) என, ஹங்கேரியின் பாலாஸ் பர்காசிடம் வீழ்ந்தார்.
