உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 25, 2026 11:06 PM

அ நிறம் | அளவு
அல்மாட்டி: ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியாவை வென்றது.
கஜகஸ்தானில் பெண்களுக்கான 21 வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 10 அணிகள் இரு பிரிவுகளாக போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. ‘டாப்–4’ இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறலாம்.
முதல் போட்டியில் கஜகஸ்தானிடம் போராடி தோற்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இந்தியா 14–10 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் அசத்திய இந்தியா, 28–19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 2 புள்ளியுடன் பட்டியலில், மூன்றாவதாக உள்ளது. நாளை தனது மூன்றாவது போட்டியில் தென் கொரியாவை சந்திக்க உள்ளது.
