ADDED : டிச 03, 2024 11:18 PM

புதுடில்லி: ஆசிய ஹேண்ட்பால் முதல் போட்டியில் இந்திய அணி 31-28 என ஹாங்காங்கை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நேற்று துவங்குகிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 8 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் பாதியில் இந்திய அணி 16-10 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஹாங்காங் அணி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் இந்திய அணி 31-28 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று, ஈரானை எதிர்கொள்கிறது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஈரான் அணி, 14-34 என ஜப்பானிடம் தோற்றது.
'ஏ' பிரிவில் கஜகஸ்தான் அணி 28-26 என சீனாவை சாய்த்தது. மற்றொரு போட்டியில் தென் கொரியா 47-5 என சிங்கப்பூரை வென்றது.